/tamil-ie/media/media_files/uploads/2023/06/Tanuvas-counselling.jpg)
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் விரும்பப்படுவது பி.வி.எஸ்.சி (B.V.Sc & AH) எனப்படும் கால்நடை மருத்துவ படிப்பு தான். எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்ற நிலையில், பி.வி.எஸ்.சி படிப்புக்கு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும். இதனால் இந்த படிப்பில் சேர, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் விரும்புவார்கள்.
மேலும், அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவராகும் வாய்ப்பு மற்றும் தனியார் துறையிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே சீட் கிடைக்கும்.
இந்தநிலையில், இந்த கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
2023 - 2024 கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 196.50
பி.சி – 195
பி.சி.எம் – 188.50
எம்.பி.சி – 195.50
எஸ்.சி – 193
எஸ்.சி.ஏ – 189.50
எஸ்.டி – 189
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.