TANUVAS 2025: பி.வி.எஸ்.சி அட்மிஷன்; எந்த கட் ஆஃப் வரை சீட் கிடைக்கும்?

TANUVAS Admission 2025: தமிழக கால்நடை மருத்துவ கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி படிப்புக்கு கடந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருந்தது? இந்த ஆண்டு எந்த கட் ஆப் வரை சீட் கிடைக்கும்? முழு விபரம் இங்கே

TANUVAS Admission 2025: தமிழக கால்நடை மருத்துவ கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி படிப்புக்கு கடந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருந்தது? இந்த ஆண்டு எந்த கட் ஆப் வரை சீட் கிடைக்கும்? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
Tanuvas counselling

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் தொடங்க உள்ள உள்ள நிலையில், பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்? கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் விரும்பப்படுவது பி.வி.எஸ்.சி (B.V.Sc & AH) எனப்படும் கால்நடை மருத்துவ படிப்பு தான். எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்ற நிலையில், பி.வி.எஸ்.சி படிப்புக்கு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும். இதனால் இந்த படிப்பில் சேர, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் விரும்புவார்கள்.

மேலும், அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவராகும் வாய்ப்பு மற்றும் தனியார் துறையிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர போட்டியிடுவர். இந்தப் படிப்புக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்ததாக பி.டெக் படிப்புகளும் இந்த கல்லூரிகளில் உள்ளன. பி.டெக் படிப்புக்கு கணிதம் படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகளை படிக்க தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளன. 

இந்தநிலையில், இந்த கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு எந்த கட் ஆஃப் வரை சீட் கிடைக்க வாய்ப்புள்ளது? கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன? என்பது யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

பி.வி.எஸ்.சி படிப்பில் மொத்தம் 660 இடங்கள் உள்ளன. மேலும், உணவு தொழில்நுட்பம் 40 இடங்கள், கோழி வளர்ப்பு 40 இடங்கள், பால் தொழில்நுட்பம் 20 இடங்கள் உள்ளன.

பி.வி.எஸ்.சி 2024 கட் ஆஃப் நிலவரம்

பொதுப் பிரிவு – 197.50

பி.சி – 194.50

பி.சி.எம் – 192

எம்.பி.சி – 194

எஸ்.சி – 191.50

எஸ்.சி.ஏ – 186

எஸ்.டி – 188.50

இந்த கட் ஆஃப் வரை கடந்த ஆண்டு சீட் கிடைத்துள்ளது. எனவே 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். படித்து முடிக்கும் பட்சத்தில் எளிதாக அரசு வேலை பெறலாம்.

College Admission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: