Advertisment

TANUVAS: பி.வி.எஸ்.சி படிக்க ஆசையா? இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்?

கால்நடை மருத்துவ படிப்புகள்; பி.வி.எஸ்.சி படிப்புக்கு இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? உணவு மற்றும் பால் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்?

author-image
WebDesk
New Update
Tanuvas counselling

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு அடுத்தப்படியாக மாணவர்களால் அதிகம் விரும்பக் கூடிய கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் அதிகம் விரும்பக் கூடியது எம்.பி.பி.எஸ் தான். இதற்கு அடுத்தப்படியாக மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடியது பி.வி.எஸ்.சி எனப்படும் கால்நடை மருத்துவ படிப்பு தான். அரசு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் இந்தப் படிப்பை அதிகம் விரும்பச் செய்கிறது. மேலும் தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளன, தனியார் நிறுவனங்கள் இல்லை.

இதனிடையே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு முடிவடைந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

1). சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி

2). கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல்

3). கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு, தஞ்சாவூர்

4). கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருநெல்வேலி

5). கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம்

6). கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி

7). கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், உடுமலைப்பேட்டை

இதுதவிர சென்னையில் உள்ள உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவு மற்றும் பால் தொழில்நுட்ப படிப்புகள், ஓசூரில் உள்ள கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் கோழி உற்பத்தி தொழில்நுட்ப படிப்பும், இந்த கவுன்சலிங் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பி.வி.எஸ்.சி படிப்பு 

பொதுப்பிரிவு – 197.50

பி.சி – 195.50

பி.சி.எம் – 193

எம்.பி.சி – 195.50

எஸ்.சி – 193

எஸ்.சி.ஏ – 190

எஸ்.டி – 189

உணவு தொழில்நுட்பம்

பொதுப்பிரிவு – 185.50

பி.சி – 178

பி.சி.எம் – 179

எம்.பி.சி – 182.50

எஸ்.சி – 171

எஸ்.சி.ஏ – 184.50

பால் தொழில்நுட்பம்

பொதுப்பிரிவு – 184.50

பி.சி – 171.50

பி.சி.எம் – 169.50

எம்.பி.சி – 183

எஸ்.சி – 169

எஸ்.சி.ஏ – 177.50

கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்

பொதுப்பிரிவு – 157

பி.சி – 156

பி.சி.எம் – 148

எம்.பி.சி – 151.50

எஸ்.சி – 119

எஸ்.சி.ஏ – 106.50

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

College Admission Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment