Advertisment

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tanuvas jobs

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 30.01.2023ல் நடைபெறும் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: மருத்துவத்துறை வேலை வாய்ப்பு; 114 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Project Associate II

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : MSc Biotechnology / Microbiology /Animal Biotechnology / MVSc or Medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 43,400

Skilled labour

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,240

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.

முகவரி : Department of Veterinary Parasitology, Madras Veterinary College, Chennai-600 007.

நேர்காணல் நடைபெறும் தேதி : 30.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1672915860.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment