அரசு கால்நடை மருத்துவ கல்லூரி வேலை வாய்ப்பு; தேர்வு கிடையாது; தகுதி இதுதான்!

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tanuvas counselling

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் சென்னையில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும், பேச, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 20,000 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1745234168.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

முகவரி: Directorate of clinics, TANUVAS, Madras Veterinary College campus, veppery, Chennai - 600007

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.05.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Chennai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: