/indian-express-tamil/media/media_files/2025/06/19/tanuvas-counselling-2025-06-19-19-17-36.jpg)
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் ஓசூரில் உள்ள கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளம் வல்லுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Young Professional - I
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Tech. (Poultry Technology) படித்திருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் உண்டு.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
முகவரி: Dr. A.K. Thiruvenkadan, Ph.D. Dean, College of Poultry Production and Management Hosur, Tamil Nadu
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.