சேலம் கால்நடை மருத்துவ கல்லூரி வேலை வாய்ப்பு; தகுதி, தேர்வு முறை என்ன?

சேலம் கால்நடை மருத்துவ கல்லூரியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
tanuvas jobs

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் சேலம் மாவட்டத்தில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

Project Technical Support – III

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 28,000 + HRA 8,400 

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1740397115.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Principal Investigator, Department of Veterinary Physiology and Biochemistry, Veterinary College and Research Institute, Salem – 636 112

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: