சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (Tata Consultancy Services) டெவலப்பர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் (TCS). இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. சிறந்த வேலை வாய்ப்புச் சூழல் மற்றும் தகுதிகேற்ற சம்பளம் வழங்கும் இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்க வேண்டும் என பலரும் விரும்புவர்.
இந்தநிலையில், டி.சி.எஸ் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டி.சி.எஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்பிரிங் பூட் மைக்ரோ சர்வீசஸ் (Spring Boot Micro Services), ஹைபர்நேட் (Hibernate), ஸ்பிரிங் எம்.வி.சி (Spring MVC), ஜாவா ரெஸ்ட்ஃபுல் சர்வீசஸ் (Java Restful Services) உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர ஜாவா புரோகிராமை பயன்படுத்தி அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பற்றி தெரிந்திருக்க வேண்டும். டீபக் (Debug) திறமை இருக்க வேண்டும். மேலும் ஜாவா கோர் கான்செப்ட்டுஸ் (Java Core Concepts), டேட்டாபேசஸ் (Database) உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் இருக்க வேண்டும். இது தவிர இந்த பொறுப்பில் 4 முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் டி.சி.எஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
மேலும், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“