பிரபல ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (Tata Consultancy Services) சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று டி.சி.எஸ் (TCS). இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. சிறந்த வேலை வாய்ப்புச் சூழல் மற்றும் தகுதிகேற்ற சம்பளம் வழங்கும் இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்க வேண்டும் என பலரும் விரும்புவர்.
இந்தநிலையில், டி.சி.எஸ் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டி.சி.எஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பெகா டெவலப்பர் (Pega Developer), பெகா சி.எஸ்.எஸ்.ஏ சர்ட்டிபிகேட் (Pega CSSA certified), பி.பி.எம் கான்செப்ட்ஸ் மற்றும் மெத்தடலாஜிஸ் (BPM concepts and methodologies) தெரிந்திருக்க வேண்டும். கூடுதலாக REST services பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் 6 முதல் 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக https://www.linkedin.com/jobs/view/4041589839/ என்ற லிங்க்ட்இன் இணைப்பு மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“