/tamil-ie/media/media_files/uploads/2019/05/z676.jpg)
trb hall ticket download 2019, trb admit card 2019, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், முதுநிலை ஆசிரியர் தேர்வு, ஹால் டிக்கெட், trb.tn.nic.in
TRB Hall Ticket Download 2019 @trb.tn.nic.in: 12.06.2019 தேதியிட்ட முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் - I இன் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை (அறிவிப்பு எண் 10/2019) ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டு இருந்தது.
தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் அதேர்வுக்கான தற்காலிக அட்மிட் கார்டை (நுழைவுச் சீட்டு ) விண்ணப்பித்த தகுதியான வேட்பாளர்களுக்கு வெளியிட்டு இருக்கிறது.
தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பிரிண்ட்அவுட் எடுத்து மறக்காமல் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
'Traffic' ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி... பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.
இந்த முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தேர்வு கணினி அடிப்படையில் தான் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கணினி அடிப்படையிலான தேர்வுக்கான தேதிகள்: 27.09.2019 முதல் 29.09.2019 வரை நடைபெறும். காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும்.
வேட்பாளர்கள் தங்கள் அட்மிட் கார்டை http://trb.tn.nic.in என்ற வலைத்தளத்தில் தங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி வரும் 17.09.2019 முதல் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
கணினி அடிப்படையிலான தேர்வைப் பழக்கப்படுத்த பயிற்சி சோதனைகளையும் (மாக் டெஸ்ட்) ஏற்பாடு செய்ய விருக்கிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.