ஆசிரியர் தினம் 2024: இந்தியாவில், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், தேசத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
Read In English: Teachers’ Day 2024: Why is Teachers’ Day celebrated on September 5?
1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி பிறந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை கௌரவிக்கும் விதமாக இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மரணத்திற்குப் பின் நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு கல்வியாளர், மரியாதை நிமித்தமாக, ஒருமுறை அவரது மாணவர்கள் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாட அனுமதிப்பீர்களா என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கான சிறப்பு அங்கீகாரம் தேவையில்லை. அதே வேளையில், ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாணவர்கள் அந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த 1962 ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி கல்வியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் போலவே, ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை வழங்குவார். கல்வித் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினம் மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளை கௌரவிப்பதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இந்த நாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றன. ஆசிரியர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கும் வகையில் கவிதைகள், சிறுகதைகள், பேச்சுக்கள் மற்றும் பிற ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“