Advertisment

பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்

இந்த பெயர் மாற்றம் பலரின் நீண்ட கால கடின உழைப்பை செயல்தவிற்கும் விதமாக அமையும் என்ற கவலையில் உள்ளனர் ஆசிரியர்கள்.

author-image
WebDesk
New Update
Anna University

Anna University Tamil News: திங்கட்கிழமை முதல் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் (AUTA), பல்கலைக்கழக பெயர் மாற்றம் குறித்த முடிவைக் கைவிடும்வரை கருப்பு பேட்ஜ்களை அணிந்து வேலை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த பெயர் மாற்றம் பலரின் நீண்ட கால கடின உழைப்பை செயல்தவிற்கும் விதமாக அமையும் என்ற கவலையில் உள்ளனர் ஆசிரியர்கள்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் என்றாலே அனைவர்க்கும் முதலில் தோன்றுவது அண்ணா பல்கலைக்கழகம்தான். ஆனால், அதனை இரண்டாகப் பிரித்து அதன் பெயரை அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (Anna Technological and Research University-ARTU) என மாற்றுவதற்கான மாநில அரசின் முடிவு பலரைக் கவலைக்குள்ளாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின்படி, கிண்டியிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் School of Architecture and Planning ஆகியவை ARTU-ன் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் மாநிலத்தில் உள்ள மற்ற அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் அறிக்கையில், பெயர் மாற்றம் தொடர்பாகப் பல்கலைக்கழக பங்குதாரர்களின் கருத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அவர்கள் இத்தனை ஆண்டுகளாகப் பெறப்பட்ட அனைத்து சர்வதேச மற்றும் தேசிய தரவரிசைகளும் இழக்கப்படும் என்ற அச்சத்திலும் உள்ளனர்.

"பல ஆராய்ச்சி வெளியீடுகள் (பல்வேறு புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகைகளில் சுமார் 25,000 வெளியீடுகள் உள்ளன), காப்புரிமை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் பெற்ற பிற IPR உள்ளிட்டவை முற்றிலும் அழிக்கப்பட்டு, பூஜ்ஜியத்தில் இருக்கும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கைகோர்க்கப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் வெற்றிடமாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"இறுதியாக, மீளமுடியாத அளவிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நற்பெயர் வேரூன்றிவிடும்" என்று அவர்கள் மேற்கோளிட்டுள்ளனர். இந்தப் பெயர் மாற்றம் குறித்த அறிக்கையைத் திரும்பப் பெறாவிட்டால், AUTA-ன் உறுப்பினர்கள் சட்டரீதியான பாதைகளை அணுக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment