வடமதுரையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடமதுரை ஒன்றியத்தில்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம் வடமதுரை ஒன்றியத்ல் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை விடுப்பாக அனுமதிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“