Advertisment

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 12828 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; அப்ளை பண்ணுங்க!

வட்டார இயக்க மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரயில் நகர், மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  02.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/05/2023051945.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment