ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கட்டணம் விவரம்:
தேர்வில் பங்கேற்ப்போருக்கு உரிய விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
விண்ணப்பிப்பது எப்படி
தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Paper-I and Paper-II ஆகிய தாள்களுக்கு, தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன.
தேவையான ஆவணங்கள்
- சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(Size: 20 - 60kb )
- கையொப்பம் போட்டோ (Size: 10-30kb)
- இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் அவசியம்
குறிப்பு: தேர்வு முடிவு வரும் வரை, அந்த மெயில் ஐடி உபயோகத்தில் இருப்பது கட்டாயமாகும்.
முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை 7ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil