TET தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வான தேர்வர்களுக்கு நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் காலை மாலை என இருவேளைகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட டிஆர்பி கிரேடு 1 தேர்வின் முடிவுகள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ், இயற்பியல், தாவரவியல், உடற்கல்வி, புவியியல், மனையியல், இந்திய பண்பாடு, அரசியல் அறிவியல், ஆங்கிலம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியியல், மற்றும் வணிகவியல் பாட ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ,28 மற்றும் 29ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகளில், 1,47,594 தேர்வர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள், அக்டோபர் 3ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடைக்குறிப்புகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அக்டோபர் 7ம் தேதி முதல் 9ம் தேதி மாலை வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வர்களின் கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வான தேர்வர்களுக்கு நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் காலை மாலை என இருவேளைகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
மொத்தம் 11 மையங்களில், இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள்
சான்றிதழ் சரிபார்ப்பிற்காக டிஆர்பி இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்ற தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள்
தேர்வர்கள் விரைந்து செயல்பட்டு, தேவையான கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.