ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும். அதற்கான ஹால்டிக்கெட், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில் நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது, தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
எந்த தேர்வு மையம் என்பது மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும், தேர்விற்கும் மூன்று நாட்கள் முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கணினி வழித் தேர்விற்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். தேர்வர்கள் http://trbpracticetest.onlineapplicationform.org/TET/SyllabusSelection.htm என்ற இணைப்பை க்ளிக் செய்து, மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்கலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“