/tamil-ie/media/media_files/uploads/2022/03/niftem-jobs.jpg)
தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சி உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவிப் பேராசிரியர் (Assistant Professor (Computer Science/IT))
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: M.Sc./MCA/M.Tech (or) Ph.D. degree in Computer Science/Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்
சம்பளம்: ரூ. 61,000
ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate - I)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: Ph.D. in Food Science/ Food & Nutrition/ Food Technology/ Chemical Engineering/ Food Process Engineering/ Biotechnology/ Nanotechnology / M.E/M.Tech. படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 54,000
முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி: M.Tech / M.Sc. / Ph.D. degree in Food Process Engineering/ Food Engineering/ Chemical Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management/ Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance/ Biotechnology/ Nanotechnology/ Chemistry/ Analytical Chemistry / Biochemistry படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 31,000 - 42,000
திட்ட உதவியாளர் (Project Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி: B. Tech in Food Process Engineering/ Food Science & Technology or B.Sc., in Food Science and Nutrition/ Biotechnology/ Biochemistry/ Microbiology/ B.Tech. in Food Technology/ Chemical Engineering/ Fisheries Engineering/ Agriculture Engineering/ Dairy Engineering/ Biotechnology/ Nanotechnology (or) M.Sc in Food Science and Nutrition/ Home Science. படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000 - 25,000+ HRA
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 45 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500, இருப்பினும் SC/ST,பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கhttps://niftem-t.ac.in/docs/application-for-apcrasrf-pa.pdf என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும். பின்னர் இதனை ஸ்கேன் செய்து projectrecruitment@iifpt.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறியஎன்ற https://niftem-t.ac.in/docs/srf-pa-advertisement.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.