தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : M.Tech. / Ph.D. degree in Food Technology/ Food Process Engineering / Food Science and Technology/ Food Process Technology/ Food Safety & Quality Assurance/ Chemical Engineering/ Dairy Engineering / Biotechnology/ Bioprocess Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000+ HRA
முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M.Tech. / Ph.D. degree in Food Technology/ Food Process Engineering/ Agricultural Process Engineering/ Post harvest technology/ Food process engineering and management/ Printing and packaging technology/ Food technology management/ Food Safety & Quality Assurance/ Food Process technology/ Food biotechnology and nutrition (or) M.Tech. in Chemical Engineering/ Biotechnology experienced with food technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000+ HRA
திட்ட உதவியாளர் (Project Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Tech. in Agriculture Engineering/ Food Engineering/ Food Process Engineering/ Food Technology/ Biotechnology/ Chemical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000 - 25,000+ HRA
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500, இருப்பினும் SC/ST, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://niftem-t.ac.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும். பின்னர் இதனை ஸ்கேன் செய்து projectrecruitment@iifpt.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.05.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://niftem-t.ac.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“