தஞ்சாவூரில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் முதல் இளநிலை உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2025
Lecturer
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
Architectural Assistantship (SW) – 2
ECE – 1
English – 1
Physics – 1
Chemistry – 1
Mechanical / First Year General Engg. – 1
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E. / B.Tech / B.S படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 56100 – 177500
Physical Director
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் Master's degree படித்திருக்க வேண்டும். NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 57700 – 182400
Skilled Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
Architectural Assistantship (SW) – 1
Workshop First Year General Engineering – 1
கல்வித் தகுதி: Architectural Draughtsman/ Draughtsman (Civil) trade/ Fitter trade ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Junior Mechanic
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்ரைட்டர் மெக்கானிசத்தில் ஓராண்டு அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Junior Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Typist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,500
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700
வயது வரம்பு தளர்வு: தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.periyarpolytech.com/recruitment.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.