தமிழக அரசின் நீர்வளத்துறையில் கொள்முதல், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிதி நிபுணர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நீர்வளத்துறையில், தஞ்சாவூர் மாவட்ட திட்ட நிர்வாக குழுவில் நிபுணர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 3 வருட காலத்திற்கு நிரப்படும். தகுதியுள்ளவர்கள் 30.11.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Procurement Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி : B.E.Civil, மற்றும் MBA.(General), or ME., படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ.1,00,000
Environmental Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி : B.E.Civil, மற்றும் MBA.(General), or ME., or M.sc (Environmental) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ.1,00,000
Social Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி : M.S.W or M.A (Social) மற்றும் M.Phil படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ.80,000
Financial Specialist
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி : M.Com.,or M.B.A (Finance) or C.A or I.C.W.A படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ.80,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சுய விவர விண்ணப்பக் கடிதத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Superintending Engineer, Water Resources Department ,Lower Cauvery Basin, Santhapillai Gate, Thanjavur – 613 001.
Email id : [email protected]
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.tenders.tn.gov.in/pubnowtend/uploaded/TE_pwd187833_appointment%20qualification%20details.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil