INFORMIX கல்வி வழிகாட்டுதல் மற்றும் உயர் கல்விக்கான ஆலோசனை வழங்கும் கல்வி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கடந்த 40 வருடங்களாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துவருகிறது.
இந்த அமைப்பு INFORMIX எனும் மையக்கருத்தில் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கும் கல்வி கண்காட்சி கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்நிகழ்வினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் கோவை பெருநகர தலைவர் உமர் பாரூக், இந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் முகமது பஷீர், சென்னை மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் சம்சு அலி, இஸ்லாமிய பள்ளியின் தாளாளர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் இன்றைய மாணவர்களுக்கு அவர்களது கல்விக்கான வழியை காண்பித்து தர வேண்டியது மிக அவசியமான ஒன்று எனவும் இந்த சிறந்த பணியை பல்வேறு துறைகளில் பணியாற்றி வரக்கூடிய மாணவர்களே முன்னெடுத்து இருப்பது சிறந்த செயலாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகள் குறித்தான விளக்கங்கள் தனிநபர் ஆலோசனைகள் மற்றும் அறிவு ஆளுமை திறன் சோதனை என பல்வேறு நிகழ்வுகள் வழங்கப்படுகிறது.
மேலும் தொடர்புக்கு 9042213453, 9042526932 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“