பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் முதன்மை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.
அதில், “அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நீட், ஜே.இ.இ. பயிற்சி பெற விருப்பம் உள்ள 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அனைத்து வேலை நாள்களிலும் 4 மணி முதல் 5.30 மணிவரை பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் தலைமையில் வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களின் முதுநிலை ஆசிரியர்களை கொண்டு குழு உருவாக்கப்பட்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும்.
அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வின்போதும் இதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நீட் மற்றும் ஜேஇஇ வகுப்புகள் தொடங்கவில்லை. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த நிலையில், இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“