தேனி மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TRB Jobs; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய வேலை வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!
வழக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : சமூகப் பணி அல்லது உளவியல் ஆலோசனை இயலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பாளராக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 6,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண். 67, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.06.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/06/2023060290.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.