/tamil-ie/media/media_files/uploads/2023/08/UGC.jpg)
இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் கல்வி அமர்வு தொடங்குவதற்கு முன்பு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தங்களால் போலி என்று அழைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிடுகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டு, 20 பல்கலைக்கழகங்கள் எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லாத பட்டியலில் உள்ளன. இதில், டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான (எட்டு) இத்தகைய நிறுவனங்கள் உள்ளன.
இது குறித்து யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி, “யுஜிசி சட்டத்தின் விதிகளுக்கு மாறாக பல நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது யுஜிசியின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ இருக்காது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.யுஜிசி பட்டியலின்படி அவை, “அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம்; கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், தர்யாகஞ்ச்; ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்; தொழிற்கல்வி பல்கலைக்கழகம்; ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம்; இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம்; சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்; மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்) ஆகும்.
உத்தரபிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை, காந்தி ஹிந்தி வித்யாபீத்; எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்); மற்றும் பாரதிய சிக்ஷா பரிஷத் ஆகும்.
மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் போலியான பல்கலைக்கழகங்கள் உள்ளன என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
முழுமையான பட்டியல் UGCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.