scorecardresearch

மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு; டிப்ளமோ கல்வித்தகுதி; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: ரேசன் கடை வேலை வாய்ப்பு; 4000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

ஆய்வுக்கூட நுட்புநர் (Lab Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை : 31

கல்வித் தகுதி : மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு (DMLT) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, பிளாக் -1,  பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், பெரும்பாக்கம் கிராமம், திருவள்ளூர் 602001.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  14.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Thiruvallur govt medical college recruitment 2022 apply soon

Best of Express