வருவாய்த்துறை வேலை; கிராம உதவியாளர் பணியிடங்கள்; 5-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு; 5-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Thiruvallur Gummidipoondi Taluk office recruitment village assistant jobs: தமிழ்நாடு அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 14 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கிராம உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 14

கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயதாக SC/SCA/ST/BC/MBC/BCM வகுப்பினருக்கு 35 வயதும், பொதுப் பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ரூ. 11,100 – 35,100

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : வட்டாசியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010474.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thiruvallur gummidipoondi taluk office recruitment village assistant jobs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express