இந்து சமய அறநிலையத்துறையில் 14 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; திருவாரூர், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகங்களில் 14 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; திருவாரூர், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகங்களில் 14 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!

Thiruvarur and Krishnagiri HRCE AC office recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், திருவாரூர் மற்றும் கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 13

Advertisment
Advertisements

திருவாரூர் உதவி ஆணையர் அலுவலகம் : 4

கிருஷ்ணகிரி உதவி ஆணையர் அலுவலகம் : 9

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 - 50,000

இரவுக் காவலர் (Night Watchman)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

பணியிடம் : உதவி ஆணையர் அலுவலகம் கிருஷ்ணகிரி

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சியின்மை. அதாவது 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/124/document_1.pdf என்ற இணையதளப்பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

திருவாரூர் : உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 2, புதுத்தெரு, மயிலாடுதுறை சாலை, திருவாரூர் – 610001

இதையும் படியுங்கள்: தபால் அலுவலகத்தில் 38,926 வேலைவாய்ப்பு; தேர்வு இல்லை; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி : உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்: 1/304-4, 3-வது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி - 635002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/124/document_1.pdf என்ற இணையதளப் பக்கம் மற்றும் கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: