Advertisment

திருவாரூர் மத்திய பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் வேலை; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் வேலை; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளர், தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

துணை பதிவாளர் (Deputy Registrar)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தனி உதவியாளர் (Personal Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை எழுத்தர் (Upper Division Clerk)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி  : Bachelors' Degree in Science படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை எழுத்தர் (Lower Division Clerk)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி  : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு; ஓ.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : “The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.11.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2023/10/Final_NT_ADVT_20102023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment