Advertisment

திருவாரூர் மத்திய பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cutn jobs

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.12,000

Guest Faculty

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : Master’s Degree in Geology/ Applied Geology& PhD in Geology /Earth Sciences with NET

சம்பளம்: ரூ.50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Nodal Officer Community College CUTN Residential Campus Central University of Tamil Nadu Nagakudi Thiruvarur-610101 Tamil Nadu.

கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutn.ac.in/wp-content/uploads/2023/04/Engagement-of-Guest-Faculty-positions-department-of-Geology-17042023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : hodgeology@cutn.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி

அலுவலக உதவியாளர்: 27.04.2023

கௌரவ விரிவுரையாளர்: 26.04.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2023/04/Recruitment-Notification-for-Non-Teaching_18042023.pdf அல்லது https://cutn.ac.in/wp-content/uploads/2023/04/Engagement-of-Guest-Faculty-positions-department-of-Geology-17042023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment