Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

tn govt jobs

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. டிகிரி படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: SSC Jobs 2023; மத்திய அரசில் 5,369 பணியிடங்கள்; 10th, 12th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், திருவாரூர் மாவட்டம் - 610001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/03/2023030677.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment