Advertisment

சுகாதாரத் துறை வேலை; குறைந்தபட்ச தகுதி போதும்; மிஸ் பண்ணாதீங்க!

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

அரசு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்ட நலசங்கத்தின் கீழ் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலை; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Technical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc in Microbiology/Biochemistry/Biotechnology/ Life Sciences படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Program cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

Instructor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) படித்திருக்க வேண்டும்.

Van Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor of Physiotherapy படித்திருக்க வேண்டும்.

Audiometric Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in hearing, language and speech படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், தூத்துக்குடி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamil Nadu Jobs Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment