Advertisment

தூத்துக்குடி துறைமுகம் வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தூத்துக்குடி துறைமுகத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
voc port jobs

தூத்துக்குடி துறைமுக வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) உதவி செயற் பொறியாளர் மற்றும் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

Law Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 90,000

Assistant Executive Engineer (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 90,000

Assistant Executive Engineer (Mech)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 90,000

வயதுத் தகுதி : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://www.vocport.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.vocport.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment