சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் : 200 இடங்களில் 3 இடங்கள் மட்டுமே பெற்ற இந்திய கல்வி நிறுவனங்கள்

2019-ம் ஆண்டில் முதல் ஆயிரம் இடங்களில் இந்தியாவை சேர்ந்த 24 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

Three in top 200, India tally unchanged in international university ranks : கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் இயங்கி வருகின்றன. உலக அளவிலான முதல் 200 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், கடந்த 5 ஆண்டுகளை போலவே நீடித்து வருகிறது. டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி மற்றும் டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களை தவிர, வேறு எந்த இந்திய கல்வி நிறுவனங்களும் கடந்த 2017-ம் ஆண்டு முதல், உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற இயலவில்லை என, குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் உலக பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவரிசை பட்டியல் மூலம் தெரிய வருகிறது.

உலகின் முதல் 1000 இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்திய கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையாத சூழலில், 22 பல்கலைக்கழகங்கள் முதல் 1000 இடங்களில் இடம்பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டில் முதல் ஆயிரம் இடங்களில் இந்தியாவை சேர்ந்த 24 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

முதல் 1,000 இடங்களில் உள்ள 22 இந்திய கல்வி நிறுவனங்களில், ஐ.ஐ.டி-பாம்பே, ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் ஓ.பி. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி ஆகிய 4 கல்வி நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் தரவரிசை பட்டியலில் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.டி ஹெளஹாத்தி, ஐ.ஐ.டி ஹைதராபாத் மற்றும் பூனேவில் அமைந்துள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகம் ஆகியவை தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, 14 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் வீழ்ச்சியடைந்தன. மேலும், நான்கு பல்கலைக்கழகங்கள் மட்டுமே உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.டி ஹெளஹாத்தி மற்றும் சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் சமீபத்திய தரவரிசை பட்டியலில், கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி புவனேஸ்வர் மற்றும் சிக்ஷா ‘ஓ’ அனுசந்தன் ஆகிய நிறுவனங்கள் கணிசமான முன்னேற்றத்தை பெற்றுள்ளன.

சமீபத்திய வெளியான இந்த தரவரிசை பட்டியல் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசிய உயர்கல்வி செயலாளர் அமித் கரே, ‘கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை ஆசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. துணைவேந்தர்கள் மற்றும் கல்வி நிறுவனத் தலைவர்களுடன் பிரதமரின் வழிகாட்டுதலும் தொடர்புகளும் ஒரு புதிய சுயாட்சி மற்றும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இதுவே தரவரிசையில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 801 முதல் 1,000 இடங்களில் இருந்து 1200 இடங்கள் வரை பின் தள்ளப்பட்டுள்ளது.

மும்பை ஐஐடி நிறுவனம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. இது 177 வது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை விட 5 இடங்கள் பின் தங்கி உள்ளது. அதற்கு அடுத்ததாக, ஐஐடி டெல்லி இடம்பிடித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 193 ல் இருந்து 185 ஆக உயர்ந்து ஐஐஎஸ்சி கல்வி நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது. இது 186 வது இடத்தில் உள்ளது. ஐ.ஐ.எஸ்.சி உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது. இந்த மெட்ரிக்குக்கு 100/100 மதிப்பெண் பெற்றுள்ளது. ஒரு QS அறிக்கையின்படி, இந்திய பல்கலைக்கழகங்கள் கல்வி நற்பெயர் மெட்ரிக் மற்றும் ஆராய்ச்சி தாக்கத்தில் தங்கள் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன. ஆனால், கற்பித்தல் திறன் அளவீட்டில் தொடர்ந்து போராடுகின்றன. ஆசிரிய-மாணவர் விகிதத்தில் முதல் 250 இடங்களில் எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில், எம்ஐடி தொடர்ச்சியாக 10 வது ஆண்டாக சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2006 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னிலை பெற்றுள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. சிங்கப்பூரின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் ஆகியவை உலகளாவிய முதல் 20 இடங்களில் உள்ள ஆசிய பல்கலைக்கழகங்களாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three in top 200 india tally unchanged in international university ranks

Next Story
IBPS RRB PO, Clerk 2021: பட்டப்படிப்பு தகுதிக்கு வங்கி அசிஸ்டண்ட் மேனேஜர் வாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com