Advertisment

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழப்பு: மாணவர் சேர்க்கை பாதிக்குமா?

பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டதால், அங்கீகாரத்தை திரும்பப் பெற வாரியம் முடிவு செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

மருத்துவ படிப்பு

சில விதிமுறைகளை மீறியதற்காக, தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்ட மூன்று மருத்துவக் கல்லூரிகளும், 150 இடங்களைக் கொண்ட புதுச்சேரியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை இழக்க உள்ளது.

Advertisment

சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய மூன்று தமிழகக் கல்லூரிகளுக்கும், புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (IGMC & RI) அபராதம் விதிக்கப்பட்டது.

இருப்பினும், இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் (UGMEB) அபராதத்துக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.

பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டதால், அங்கீகாரத்தை திரும்பப் பெற வாரியம் முடிவு செய்துள்ளதாக இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் இயக்குனர் ஷம்பு சரண் குமார் கல்லூரி டீன்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்தி மலர் கூறுகையில், எங்கள் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். எங்கள் கல்லூரிகள் அனைத்திலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு உள்ளது, என்றார்.

சில மருத்துவர்கள் வார விடுமுறை என்பதனாலோ அல்லது விடுப்பு எடுப்பதாலோ வேலைக்கு வராமல் போகலாம். எங்களிடம் வருகைப் பதிவுகள் மற்றும் விடுப்புக் கடிதங்கள் உள்ளன, ஆனால் இந்த இயந்திரங்களில் ஆசிரியர்கள் இல்லாததை பதிவு செய்ய வாரியம் விரும்புகிறது, சில கல்லூரிகளில் கேமராக்கள் செயலிழந்துவிட்டன, அல்லது வானிலை காரணமாக அவை வேறு திசைக்கு திரும்பிவிட்டன என்று அவர் கூறினார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை, மூத்த அதிகாரிகள் சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடியுடன் கலந்துரையாடினர். பயோமெட்ரிக் சிஸ்டமில், வராத அனைவரையும் அப்டேட் செய்வதில், கவனம் செலுத்த ஒரு நபர் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இணக்க அறிக்கை திங்களன்று அனுப்பப்படும், என்று அவர் கூறினார்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த இறுதி எம்பிபிஎஸ் செய்முறைத் தேர்வின் போது மதிப்பீட்டாளர்கள்,விர்ச்சுவல் அசெஸ்மெண்ட் வழியாகவும், இந்த ஆண்டு நேரடியாகவும் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஆதார்-அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளில் குறைபாடுகளை வாரியம் கண்டறிந்தது.

இதுகுறித்து கல்லூரி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, உண்மைகளை கவனமாகப் பரிசீலித்த பிறகு, கல்லூரி அதிகாரிகளின் பதில் திருப்திகரமாக இல்லை. இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு, கேமராக்களின் செயல்பாட்டில் குறைபாடு உள்ளது. தேவையான அளவு ஆசிரியர் மற்றும் ரெசிடண்ட் மருத்துவர்கள் இல்லை,என்று இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் தெரிவித்தது.

எனவே, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பயிற்சி பெறும் மாணவர்களைப் பொறுத்தவரை, புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை (150 இடங்கள்) தொடர்ந்து அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று ஷம்பு சரண் குமார் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment