சென்னை, விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள டைடல் பார்க் நிறுவனங்களில் உதவி பொறியாளர், மேலாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Technical Assistant / Multi Specialist Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Graduate in Engineering or Diploma in Engineering (Mechanical / EEE / E&C) படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Manager (Operation & Maintenance)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Graduate in Engineering (Mechanical / EEE / E&C) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Executive Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
Executive Engineer (Civil)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 80,000
Assistant Engineer (Civil)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BE (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Assistant Engineer (Electrical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BE (EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 5-7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Superintending Engineer/ Executive Engineer (Electrical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE (EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 1,00,000
Manager (Finance & Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Any Degree with Qualified Chartered Accountant படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 59,300 – 1,87,700
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: hr@tidelpark.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tidelpark.com/en/careers என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.