/indian-express-tamil/media/media_files/2025/01/18/DLS5gm5IdDPOUdSCkyLy.jpg)
வேலூர், திருப்பூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் டைடல் பார்க் நிறுவனத்தில் மேலாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் நிர்வாக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Manager (Operation & Maintenance)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Graduate in Engineering (Mechanical / EEE / E&C) படித்திருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Graduate in Engineering / Diploma in Engineering (Mechanical / EEE / E&C) படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Executive Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: hr@tidelpark.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.