Advertisment

தமிழக அரசு வேலை; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TIIC invites application for marketing executive posts: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
தமிழக அரசு வேலை; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது.

தற்போது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021.

Marketing Executive

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 21 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம்; நிதி சார்ந்த தயாரிப்புகள் அல்லது சேவையில் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.25,000 + படிகள்

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://tiic.co.in/mktg_recruitment என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tiic.org/wp-content/uploads/2021/10/Marketing-Executive_Systems-converted-1.pdf என்ற இணைய தளப்பக்கத்தை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment