Advertisment

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

MIS Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.E or B.Tech in computer Science / IT/ Computer Application / Master of Computer Application/ Master in Science (M.Sc) in IT / Computer Application, Master Degree in Computer / IT Specialization படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,000

Information, Education and Communication (IEC)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : P.G. Degree in Mass Communication / Mass Media படித்திருக்க வேண்டும். மேலும் 2-3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 25,000

Planning , Convergence & Monitoring

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Tech/MBA.M.Sc. படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000

Liquid Waste Management Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Environmental Engineering / Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 1-2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 35,000

Solid Waste Management & Sanitation Expert

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Bachelor Degree in Environmental Engineering / Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 1-2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலமாக ஆன்லைனி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment