இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; திருநெல்வேலி உதவி ஆணையர் அலுவலகத்தில் 3 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; திருநெல்வேலி உதவி ஆணையர் அலுவலகத்தில் 3 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Tirunelveli HRCE AC office recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில், திருநெல்வேலி உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 - 50,000

ஓட்டுநர் (Staff Driver)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 - 62,000

இதையும் படியுங்கள்: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, ஏ.ஆர்.லைன் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: