திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு; 8, 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு; 8, 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

Tirunelveli Medical College Hospital recruitment 2022 for various posts: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் பல்வேறு திட்டங்களில் தற்காலிக அடிப்படையில் மனநல ஆலோசகர், மருந்தாளுனர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 26.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மனநல ஆலோசகர் (Psychologist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

Advertisment

கல்வித் தகுதி : M.Sc Psychology / M.Phil Clinical Psychology / M.A or M.Sc Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.18,000

தரவு உள்ளீட்டாளர் (Data entry operator)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.10,000

பாதுகாவலர் (Security)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 6,300

துப்புரவு பணியாளர் (Sanitary Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.5,000

மருத்துவமனை பணியாளர்(Hospital Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.5,000

Advertisment
Advertisements

இதையும் படியுங்கள்: வேலூர் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

மருந்தாளுனர் (Pharmacist)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.10,000

சமூகப் பணியாளர்(Social Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி M.A Social Work (Medical / Psychiatry) Master of Social Work (Medical / Psychiatry) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

முதல்வர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  திருநெல்வேலி – 627011

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs Tirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: