Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் முன் இடையீட்டு மையத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை பெருநகர வளர்ச்சி குழும இன்டர்ன்ஷிப் அறிவிப்பு; டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Audiologist and Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in Speech and Language pathology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

Optometrist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in Optometry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 9,500

Early Intervention cum Special educator cum Social worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ சமூகப்பணி/ சமூக அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in Medical Laboratory Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Dental Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 9,000

System Analyst/ Data Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BPT/ BOT/ BPO/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், சேர்மன் லட்சுமணன் தெரு, நகராட்சி அருகில், திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் - 635601

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment