தமிழக அரசு வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வட்டார இயக்க மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022110328.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/ மகளிர் திட்டம், No. 305, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் – 641604

விண்ணப்பிக்க கடைசி தேதி:  10.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022110326.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: