திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக நுட்புனர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 31 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!
ஆய்வக நுட்புனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 31
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (DMLT) பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.15,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் மாவட்டம் - 641608
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022111164.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil