scorecardresearch

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக நுட்புனர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 31 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

ஆய்வக நுட்புனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 31

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (DMLT) பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் மாவட்டம் – 641608

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022111164.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tiruppur health department medical college jobs 2022 apply soon