Advertisment

வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
Apr 18, 2022 17:18 IST
தேனி மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 5-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tiruppur Revenue department recruitment 2022 apply soon: வருவாய்த்துறையில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு, அதுவும் குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும். இந்த அருமையான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 24

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ 15,700 – 50,000

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4: முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அ-பிரிவு, அறை எண் 224. இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் ரோடு திருப்பூர் - 641604

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tiruppur #Jobs #Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment