Advertisment

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 108 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 21

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 28 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/ மகளிர் திட்டம், நெ. 305, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் – 641604.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.02.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/02/2023020261.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tiruppur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment