Advertisment

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Jobs women

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, களப் பணியாளர், மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Master of Social Work (MSW)/ Master in Law/ Master of Psychology/ Sociology படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000

களப்பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : Master of Social Work (MSW)/ Master in Law/ Master of Psychology/ Sociology படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruppur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகர், அறை எண் 35, 36 தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.06.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tiruppur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment