10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது.
www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.67 % தேர்ச்சி பெற்று, பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் டாப் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
*பெரம்பலூர் - 97.67%
*சிவகங்கை - 97.53%
*விருதுநகர் - 96.22%
*கன்னியாகுமரி - 95.99%
*தூத்துக்குடி - 95.58%
10 ஆம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்:
*தமிழ் - 95.55%
*ஆங்கிலம் - 98.93%
*கணிதம் - 95.54%
*அறிவியல் - 95.75%
*சமூக அறிவியல் - 95.83%
தேர்ச்சி விபரங்கள் :
தேர்ச்சி பெற்றவர்கள்: 8,35,614 (91.39%)
மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“