10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்- 12வது இடத்துக்கு முன்னேறிய கோவை

முதல் மூன்று இடங்களை அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பெற்றுள்ள நிலையில், கோவை மாவட்டம் 94.01% பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் மூன்று இடங்களை அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பெற்றுள்ள நிலையில், கோவை மாவட்டம் 94.01% பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
cbse students2

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியானது.

Advertisment

நடந்து முடிந்த தேர்வில் மாணவர்கள் 4,47,203 பேரும் மாணவிகள் 4,47,203 என மொத்தம் 8,94,264 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட 5.95 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாற்று திறனாளிகள் 13,510 தேர்வு எழுதிய நிலையில் 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களை அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பெற்றுள்ள நிலையில், கோவை மாவட்டம் 94.01% பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisment
Advertisements

கோவை மாவட்டத்தில் 19,614 மாணவர்களும் 20,126 மாணவிகள் என 39,740 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் ஒருபடி முன்னேறி 12 இடத்தை பிடித்துள்ளது.

இதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: